
வாரிசு அரசியலால் ஆட்சிக்கும், கட்சிக்கு வந்த உதயநிதி எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க உரிமையம் இல்லை
திமுக கட்சியில் உழைத்த கோடிக்கணக்கான தொண்டர்கள்,திமுக தலைவர்கள் பலர் இருக்க கருணாநிதி மகன் என்ற அடிப்படையில் ஸ்டாலின் திமுக தலைவர், முதலமைச்சர் என்று பெற்ற அதிகாரத்தை நீங்கள் நினைத்து பார்த்ததுண்டா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்ற குடும்ப வாரிசு அடையாளத்தை மட்டும் வைத்து, இன்றைக்கு கட்சியிலும், ஆட்சியிலும் உங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது, மறைக்க முடியாது.