
அஜித் சார் சொன்னது அவரது சொந்த கருத்து....எந்த கருத்தாக இருந்தாலும் பாராட்டத்தக்கது ! உதயநிதி பேட்டி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் விவகாரம் குறித்து அஜித் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், ''உண்மையிலேயே யாரு பேட்டி கொடுக்கணுமோ நீங்க அவரிடம் (விஜய்) பேட்டி எடுக்க முயற்சிக்கவில்லையா? இல்லை பேட்டி கொடுக்க விரும்பவில்லையா? என்று எனக்கு தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடந்து வருவதால் இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்று தெரிவித்தார் .