
நான் கொண்டு வந்த திட்டத்திற்கு உதயநிதி ஸ்ட்டிக்கர் ஒட்டிக் கொண்டார் ! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு !
2026 சட்டமன்ற தேர்தல் எழுச்சி பயணம் கோவையில் துவக்கி உள்ளோம் .கோவை மாவட்டம் ராசியான மாவட்டம் . கழக உடன் பிறப்புகள் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்துள்ளோம். 2021ல் 100/100 வெற்றியை பெற்றது கோவை. அதே போல் 2026லும் வெற்றி கிட்டும் . கவுண்டம்பாளையம் அதிமுக எஃகு கோட்டை. வேறு எந்த கொம்பனாலும் வெற்றி கொள்ள முடியாது. 8 பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி பணிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நான் கொண்டு வந்த திட்டத்திற்கு உதயநிதி ஸ்ட்டிக்கர் ஒட்டினார். உதயநிதி க்கு வெட்கம் மானம் கிடையாது. அதிமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை ரத்து செய்துள்ளார்கள். திமுக ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி. கமிஷன், கரப்ஷன் திமுக. மு.க.ஸ்டாலின் அரசாங்கம் திட்டங்களை கொண்டு வந்து குழு அமைப்பார். அவரது அரசாங்கம் குழு அரசாங்கம். இது தான் சாதனை வேறு என்ன சாதனை பன்ன?. வரிகள் அதிகம் உயர்த்தப்பட்டுள்ளதுஇந்த ஆட்சி தேவையா??? எப்போது பார்த்தாலும் கடன் வாங்கி மகளிர் உரிமை தொகை வழங்குகிறீர்களே வெட்கமாக இல்லையா??? - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு