
மக்களுடன் செல், மக்களுடன் வாழ்...நம்முடன் மக்கள் இருக்கிறார்கள் - வெற்றி நிச்சயம் ! TVK விஜய் பேச்சு
தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான 'My TVK' செயலியை இன்று அறிமுகம் செய்தார் விஜய். தவெகவில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது அக்கட்சி தலைமையால் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் விஜய் பேசுகையில், தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் அதிகார பலத்தை உடைத்து 1967 மற்றும் 1977 ஆகிய தேர்தலில் புதிய கட்சியினர் ஆட்சிக்கு வந்தார்கள். அதுபோல் 2026 சட்டசபைத் தேர்தல் அமையும். மக்களுடன் செல், மக்களுடன் வாழ் என்று அண்ணா கூறினார். அவர் கூறியதைச் செய்தாலே போதும். அண்ணா வழியில் செல்வோம். வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு எல்லோரையும் சந்தித்தவர்களே வென்றுள்ளனர். அடுத்ததாக மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு பயணம் என்று தொடர்ச்சியாக மக்களுடன் இருக்க போகிறோம் என்று தெரிவித்தார்.