TVK Vijay | தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்! வேதனையடைந்த தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் உயிரிழந்தது விஜய்யை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் நேற்றைய தினம் கட்சி பணிகளை முடித்துவிட்டு அறையில் தங்கி இருந்த போதுத மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவர் உடல் சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. தவெக கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.