கட்சி கொடியின் அறிமுக விழா.. கண்கலங்கிய தளபதி விஜய் - எமோஷனலான தொண்டர்கள்! Video!

Thalapathy Vijay : தளபதி விஜய் இன்று தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கட்சி பாடலும் இன்று வெளியானது.

Share this Video

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், இந்த ஆண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு பட பணிகளை மட்டும் முடித்துவிட்டு, பின் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும், சினிமாவில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவித்தார். 

இந்த நிலையில், இன்று ஆகஸ்ட் 22ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பனையூர் அலுவலகத்தில் அக்கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இரு ஆபிரிக்க யானைகள் பிளிற, வாகை என்பதும் மரத்தின் பிங்க் நிற பூ ஒன்று இடையில் உள்ளது போல அமைந்திருக்கிறது அக்கட்சியின் கொடி. இந்த கொடி அறிமுக விழாவில், த.வெ.க கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் இன்று தனது கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்துவைத்தபோது, தளபதி விஜய் கண்கலங்கி நின்றதை பார்த்து, அவரது கட்சி தொண்டர்கள் மிகவும் எமோஷனலாக மாறியுள்ளார். மேலும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் கட்சியினர் நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனத்திடம் பல செய்திகளை பகிர்ந்துகொண்டனர்.

Related Video