பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!

TVK Vijay : பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான தளபதி விஜய் இன்று பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Ansgar R  | Published: Sep 17, 2024, 5:32 PM IST

எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் தளபதி விஜயின் 69வது திரைப்படம் வெளியாக உள்ளது. அதுவே திரை உலகில் அவர் பயணிக்கும் இறுதி திரைப்படமாக மாறுகின்றது. அந்த திரைப்பட பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, முழு நேர அரசியல் தலைவராக தளபதி விஜய் பயணிக்கவிருக்கிறார். ஏற்கனவே இந்த ஆண்டு துவக்கத்திலே தனது தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டார். 

பிறகு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அக்கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அவர் வெளியிட்ட நிலையில், இம்மாத இறுதியில் விக்கிரவாண்டியில் த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்க உள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜய் த.வெ.க சார்பாக முதல்வர் வேட்பாளவராக களமிறங்க உள்ளார்.

இந்நிலையில் இன்று பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தளபதி விஜய். அப்போது அருகில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் சிலர் அவரோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Read More...

Video Top Stories