
அண்ணா பேருந்து நிலையம் முன்பு த.வெ.கவினர் "விசில்" சின்னத்தை பொது மக்களுக்கு வழங்கி கொண்டாட்டம் !
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களை உள்ள நிலையில் அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பொதுச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நமக்கான முதல் வெற்றியை தொடங்கி உள்ளோம் என்று தெரிவித்தார் மேலும் கட்சியின் நிர்வாகிகள் தமிழக முழுவதும் விசில் சின்ன ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இருந்து அதனை மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் சுவர் விளம்பரம், போஸ்டர்கள், மேலும் பொது மக்களுக்கு விசில் வழங்கி தங்களது கட்சியின் சின்னத்தை பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்து வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் சத்யா சுரேஷ் தலைமையிலான த.வெ.கவினர் அண்ணா பேருந்து நிலையம் முன்பாக பொதுமக்களுக்கு விசில் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்...தொடர்ந்து பஜாரில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களுக்கு விசில் சின்னத்தை வழங்கினர்.