
தவெக இயக்கம் மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் ! தவெக செங்கோட்டையன் பேட்டி
தவெக மதம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது. எந்த எளிய மக்களை வாழவைப்பது சமநிலையை உருவாக்குவது, சமத்துவத்தை காண்பது போன்ற தத்துவத்தை தவெக தலைவர் விஜய் நிறைவேற்றி வருகிறார்.வீடு இல்லாதவர்களுக்கு வீடு, இருசக்கர வாகனங்கள் இல்லாதவர்களுக்கு இருசக்கர வாகனம், பொருளாதாரத்தில் உயர்த்துவது,பெண்களுக்கு பாதுகாப்பு,சட்ட ஒழுங்கு பேணிக்காப்பது உள்ளிட்டவற்றை செய்யவுள்ளார்.இதனை 2026ல் நாம் காணவுள்ளோம். டிடிவி தினகரன் ஓபிஎஸ் தவெக கூட்டணியில் இணைவதை விரைவில் எதிர்பார்க்கலாம்.இது பொங்கலுக்கு முன்பே நடைபெறும். என செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் .