செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி

Share this Video

அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுத்த முயற்சிகள் கை கூடுவதற்கு முன்பாகவே அவரை get out என்றதால் அவர் வேறொரு இயக்கத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எங்களை சந்தித்தார். செங்கோட்டையன் என்னை சந்திக்கும் போது விஜய் கட்சியில் இணைவது பற்றி பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய பின்பு சில கட்சிகள் நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என பேசினார்கள். அதுபற்றி நாங்கள் முடிவுக்கு வந்த பிறகு அறிவிக்கிறேன். தவெக கூட்டணிக்கு வர சொல்லி செங்கோட்டையன் அழைக்கவில்லை. 2021 தேர்தலில் அமித்ஷாவின் கூட்டணி முயற்சிகளை முறியடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. 2024ல் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்டார். எங்களை வெளியேற்றிய பிறகு திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என பி டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அதிமுகவில் இன்னும் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்கள் இருந்தால் இந்த இயக்கம் 2026 தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு தான் விழித்துக் கொள்வார்கள். அமமுக கூட்டணி யாருடன் என்பது தை மாதத்தில் தெரிந்துவிடும். என்று மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி

Related Video