உங்கள பெத்தவங்கள கோர்ட்டுக்கோ, ஜெயிலுக்கோ கொண்டு வந்து நிறுத்தீடாதீங்க - TTF வாசனின் தாய் உருக்கம்

பெற்றவர்களை கோர்ட்டுக்கோ, ஜெயிலுக்கோ கொண்டு வந்து நிறுத்திவிடாதீர்கள் என்று பிரபல யூடியூபர் TTF வாசனின் தாயார் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Video

பிரபல யூடியூபரான் TTF வாசன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுவது, சாகசம் செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வாசன் நேற்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவரை வரவேற்ற அவரது தாயார் கூறுகையில், உங்களை பெற்றவர்களை நீதிமன்றத்திற்கோ, சிறைச்சாலைக்கோ கொண்டு வந்து விடாதீர்கள். எனது கஷ்டம் என்னோடு போகட்டும் என உருக்கமாக குறிப்பட்டுள்ளார்.

Related Video