2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!

Air India Express : இன்று திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்தது.

Share this Video

இன்று மாலை சுமார் 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி அந்த விமானத்தில் இருந்த இயந்திர கோளாறு குறித்து கண்டுபிடித்த நிலையில், திருச்சிக்கு அந்த விமானத்தை திருப்பியுள்ளார். 

இருப்பினும் உடனடியாக பயணிகளோடு அந்த விமானத்தை தர இயக்கினால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என்று எண்ணி, சுமார் 2 மணி நேரம் அந்த விமானத்தில் இருக்கும் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமிட்டு சுமார் 8.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் 144 பயணிகளுடன் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினார். இப்போது அந்த பயணிகள் அனைவரும் நலத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விமான ஓடுதளத்தில் அந்த பிளைட் இறங்கிய பொழுது அருகில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சந்தோஷத்தில் கூச்சலிட்ட காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Related Video