மது போதையில் காட்டு யானைகளுடன் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

ஆபத்தை உணராமல் காட்டு யானைகளுடன் விளையாடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

First Published Feb 7, 2023, 10:08 AM IST | Last Updated Feb 7, 2023, 10:08 AM IST

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை முள்ளி காரமடை மார்க்கமாக செல்லக்கூடிய சாலை அடர்ந்த வனப்பகுதி ஒட்டியுள்ள சாலை ஆகும். இச்சாலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில் காரமடை வழியில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மஞ்சூரில் இருந்து காரமடை செல்லும் சுற்றுலா பயணிகள் மிக கவனத்துடன் செல்ல வேண்டிய இச்சாலையில் ஒரு சிலர் இன்று கெத்தை மாரியம்மன் கோயில் அருகே 5 காட்டு யானைகளுடன் பைக் மற்றும் கார்களை வைத்துக்கொண்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மதுபோதையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video Top Stories