TN Budget 2025 | தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூபாய் இலச்சினை மாற்றம்! முதல்வர் வெளியிட்ட வீடியோ !

Velmurugan s  | Published: Mar 13, 2025, 6:00 PM IST

நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தற்போது மிக முக்கிய அப்டேட் ஒன்று இந்த பட்ஜெட்டில் நிகழ்ந்துள்ளது. இந்திய ரூபாயின் இலச்சினை (அடையாளம்) ₹ என அடையாளப்டுத்தப்பட்டதில் இருந்து அதனை தான் தமிழக அரசு பட்ஜெட்டில் ரூபாய் மதிப்பீட்டை குறிப்பிடுகையில் குறிப்பிட்டு வருகிறது. ஆனால், இந்த முறை ₹ குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை ரூபாயின் அடையாள இலச்சினையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் தேசிய அளவில் மிக முக்கியத்துவம் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Video Top Stories