Watch : காகிதப்பூ யார்? ஆலமரம் யார்? நெல்லை அதிமுக காட்டம்!!

மின்சாரத்தை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனே புரண்டு படுக்கும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது என நெல்லையில் நடந்த மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்தார். 
 

First Published Sep 16, 2022, 11:55 PM IST | Last Updated Sep 16, 2022, 11:55 PM IST

தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அதிமுக வழக்கறிஞரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மின்சாரத்தை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனே புரண்டு படுக்கும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. விரைவில் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வுக்கு பிறகு எடப்பாடி தலைமையில் அதிமுக வீறு நடைபோட்டு திமுகவை அழித்து ஒழிக்கும். 

உள்கட்சி பிரச்னை பற்றி பேசும் அளவுக்கு நான் அதிமுகவில் பெரிய தலைவர் இல்லை. ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். தமிழக அரசு மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறது. இது திராவிட மாடல் அரசு இல்லை. ஷாக் மாடல் அரசு.  மின்சாரத்தை கண்டுபிடித்தது தாமஸ் ஆல்வா எடிசன். எம்மதமும் சம்மதம் என்பதே அதிமுகவின் நோக்கம் எந்த மதத்தினரையும் புண்படுத்தினால் அது தவறு. எல்லா நீதின்றத்திலும் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்வு பெற்றுள்ளோம். எனவே விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். அதன் பிறகு எடப்பாடி தலைமையில் அதிமுக திமுவை அழித்து ஒழிக்கும் முயற்சியில் வீறு நடைபோட்டு இயங்கும்.

எடப்பாடி தலைமையில் தான் 66 எம்எல்ஏக்கள் பெற்றிருக்கிறோம் என்பதை மூத்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு குறித்து கேள்வி எழுப்பியபோது, சட்டம் தெரியாதவர் சபாநாகர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது கூட ஒரு புகார் கொடுத்துள்ளார். சபாநாயகர் பதவி என்பநு மாண்புமிக்கது அவர் குற்றம் சாட்டுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும், சபாநாயகர் கொடுத்தது பொய் புகார் என்று தெரிந்து தான் அன்றைக்கு நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றார். 

ஒருவேளை சட்டமன்றத்தின் மாண்பை காக்க அந்த வழக்கை வாபஸ் பெற்றிருந்தால்  இன்றைக்கும் இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். பெறவில்லை என்றால் சட்டமன்ற மண்பை பாதுகாக்க, வழக்கு முடியும் வரை சபாநாயகர் பதவி விலக வேண்டும். எதிர்க்கட்சி கொறடாவாக இருக்கக் கூடிய வேலுமணிக்கு அந்த வாய்ப்பை இனி சபாநாயகர் வழங்குவாரா என்ற சந்தேகம் எழுகிறது. நாங்கள் வழக்கை நடத்த தயாராக இருக்கிறோம். வழக்கு கொடுத்தவர் என்ற முறையில் சபாநாயகர் நீதிமன்றம் வரவேண்டும். அப்போது நாங்கள் கேள்வி எழுப்புவோம். எனவே வழக்கு முடியும் வரை அவர் பதவி விலகி இருக்க வேண்டும்.

நெல்லை எம்பி மகனை மணல் கடத்தல் வழக்கில் தேடுகிறார்கள். நெல்லையில் திமுகவின் இரண்டு அணிகளில் ஒரு அணியினர் கொடுத்த புகாரில் தான் எம்பி மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும். ஸ்டாலினின் தந்தை கருணாநிதி அதிமுகவை அழிக்க வேண்டுமென்றார். இன்று அவர் இல்லை. அதிமுக ஆலமரம். இது காகிதப்பூ அல்ல. காகிதப் பூ ஆலமரத்தை பற்றி பேச அருகதை இல்லை'' என்று தெரிவித்தார்