Tik Tok-ல் புள்ளிங்கோ நடத்திய நிஜ கல்யாணம் .. சீரழிவுக்கு காரணமாகும் அதிர்ச்சி வீடியோ..!

திருமணம், திருமாங்கல்யம், மஞ்சள் கயிறு இதற்க்கு எந்த மரியாதையும் இன்றி திருமண பந்தத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இதுபோன்று நாடகத்தனமான தாலி கட்டும் செயலை சில நண்பர்களும் சேர்ந்து செய்து வைக்கின்றனர் என்று விடியோவை பார்க்கும் பலர் இந்த கல்யாணத்தை பற்றி சமூக தளங்களில் விமர்சிக்கிறார்கள்.

Share this Video

டிக்-டாக் செயலி உலகமுழுவதும் இன்று மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள். இன்னும் சிலர் அதிக லைக், ஷேர்களை பெற வேண்டும் என்பதற்காகவும், பயனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் பலர் டிக்-டாக் செய்ய முயற்சித்து உயிர் கூட விட்டு இருக்கிறார்கள் அந்த அளவிற்கு டிக்-டாக் மோகம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், ஒரு ஜோடி திருமணம் செய்யும் டிக் டொக் வீடியோ பத்திவிட்டுள்ளனர் அதில் ஒரு சிறு வயது பெண்ணை கோவில் வளாகத்தில் நிற்க வைத்து அழுக்கு துணியுடன் தாலி கயிறு காட்டுகிறார் ஒரு பையன் அதன் பின்னர் உடனடியாக அவருடைய நண்பர்கள் பூமாலை கொடுத்து இருவரையும் மாற்றிச் சொல்கிறார்கள் இதில் திருமணம், திருமாங்கல்யம், மஞ்சள் கயிறு இதற்க்கு எந்த மரியாதையும் இன்றி திருமண பந்தத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இதுபோன்று நாடகத்தனமான தாலி கட்டும் செயலை சில நண்பர்களும் சேர்ந்து செய்து வைக்கின்றனர் என்று விடியோவை பார்க்கும் பலர் இந்த கல்யாணத்தை பற்றி சமூக தளங்களில் விமர்சிக்கிறார்கள்.

இதுபோன்று டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலைத்தளங்கில் உலா வருவதால் இந்த டிக் டாக் பதிவு மட்டும் போதுமா..! என்றும் விமரிசித்து வருகிறனர் என்பது குறிப்படத்தக்கது.

Related Video