Video: முதுமலை புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாடிய புலியின் வீடியோ

முதுமலை புலிகள் காப்பகத்தில் மான் கூட்டத்திற்குள் புகுந்த புலி அதிரடியாக ஒரு மானை வேட்டையாடி இழுத்துச் சென்ற இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

First Published Jan 8, 2023, 3:16 PM IST | Last Updated Jan 8, 2023, 3:16 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வனத்துவையினரின் வாகனங்கள் மூலம் சென்று வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.

இந்நிலையில் வனப்பகுதிக்குள் மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கிருந்த புலி மானை வேட்டையாடி இழுத்துச் சென்றதை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Video Top Stories