Thoothukudi | தொடரும் தூத்துக்குடி மாநகராட்சியின் வரி உயர்வு!அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில்வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் மாநகராட்சி கூட்டத்தில் சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வரிகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்பதை முன் நிறுத்தி, அதிமுக மாமன்ற எதிர்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் அதிரடியாக வெளிநடப்பு செய்தனர்.