Thiruvallur : பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து - சாலையோரத்தில் இறங்கி விபத்து! Video!

Thiruvallur : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ரயில்வே கேட்டை கடந்த போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையோரம் இறங்கி விபத்து.

Share this Video

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து காட்டூர் கிராமத்திற்கு அரசு பேருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. பொன்னேரி ரயில்வே கேட்டை அந்த பேருந்து கடந்து சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பேருந்து சாலையோரம் கட்டுப்பாட்டை இழந்து சென்றது. 

சாலையோரம் உள்ள சரிவில் அந்த பேருந்து சரிந்து நின்ற நிலையில், அதில் பயணித்த அனைத்து பயணிகளும் அலறியடித்து கிழே இறங்கினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்து ரயில்வே கேட்டை கடந்த போது பேருந்தில் பிரேக் பிடிக்காமல் திடீரென பழுது ஏற்பட்டதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த சரக்கு வாகனத்தில் மோதுவது போல சென்று சாலையோரம் இறங்கியுள்ளது அண்ட் பேருந்து.

பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் மேற்கொண்டு பேருந்து கவிழாமல் நின்றது. 40பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் சாலையோரம் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Video