
வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் குரூப் 2 தேர்வில் பணியிடங்களுக்கான எண்ணிக்கை குறைவாக அறிவிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்க அரசு எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டதக்கு, வேலையில்லா நெருக்கடி அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வு மூலம் அறிவித்திருக்கிற பணியிடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 200 பேர் 300 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. இது எந்த அளவுக்கு வேலையின்மையை அதிகரித்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆகவே வேலையின்மையை போக்கும் வகையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் கொள்கை வகுக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் தனியார் மயக்கம் ஆக்குவது ஆட்குறைப்பு செய்வது, அவுட்சோர்சிங் என்ற முறையில் தற்காலிகமான தொகுப்பு ஊதிய அடிப்படையிலான பணியாளர்களை எடுப்பது போன்ற நடவடிக்கைதான் இதற்கு காரணம். என்று பேசினார் .