Viral Video : படிக்கட்டில் பயணம்; திடீரென விழுந்த மாணவன்; வைரல் வீடியோ!!
மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
பள்ளிக்குச் செல்லும்போது மாணவர்கள் முண்டியடித்து பஸ்ஸில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இன்று காலை மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். இதுவே பஸ்ஸின் முன்பக்கத்தில் இருந்து விழுந்து இருந்தால் என்னவாகும் என்பதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். படியில் பயணம், நொடியில் மரணம் என்பதை மாணவர்கள் மறந்து விடக் கூடாது.