உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த முதியவர்.. மூதாட்டியை அடக்கம் செய்த பேரூராட்சி நிர்வாகம்: நெகிழ்ச்சி செயல்

மூதாட்டி உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த முதியவருக்கு உதவி செய்த பேரூராட்சி நிர்வாகம்.

First Published Mar 3, 2024, 5:32 PM IST | Last Updated Mar 3, 2024, 5:32 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யனார் பாளையம் கிராமத்தைச் சார்ந்த கோவிந்தசாமி மகன் ஏழுமலை என்பவர் தனது அம்மாவுடன் கடந்த 20 ஆண்டு காலமாக சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பே சிறியதாக கொட்டகை ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்தனர்.

ஏழுமலை என்பவரின் தாய் நெல்லிக்காய் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், ஏழுமலை என்பவர் சற்று மனநல பாதித்தது போல் செய்கையில் இருந்ததாகவும், நேற்று இரவு படுக்கையிலேயே இறந்து விட்டதாகவும்  கூறப்படுகிறது, அவரது தாய் 80 வயது உடையவர் என்பதால் எந்த கரும காரியங்களும் செய்ய முடியாமல்  சாலையின் ஓரமாக சடலத்தை வைத்து அழுது கொண்டிருந்தார்.

பேரூராட்சி தலைவர் ரோஜரமணி தாகபிள்ளை அவர்களிடம்   தகவல் தெரிவிக்கப்பட்டது.  உடன் பேரூராட்சி துனை  தலைவர் ஆஷாபி ஜாகிர் உசேன் தலைமையில் வார்டு கவுன்சிலர் சக்தி, வழக்கறிஞர் சதாம் உசேன் , ஆட்டோ சங்கர், பேரூராட்சி பணியாளர்கள் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories