தலை தெறிக்க நிர்வாணமாக ஓடிய கள்ளக்காதலன்.. போலீஸிடம் சிக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!
சென்னையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த போது உறவினர் வந்ததால் இளைஞர் ஒருவர் ஆடையில்லாமல் வெளியில் ஓடிவந்து போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் காமராஜர் சாலை காந்தி நகர் பகுதிகளில் நள்ளிரவில் ஒருவர் ஆடையின்றி திரிவதாகவும், கையில் கத்தியுடன் சுற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு இரவில் அடிக்கடி தொலைபேசி அழைப்புக்களும் வருவதாகவும், சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் சென்றால் அங்கு யாரும் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் நிர்வாண ஆசாமி நடந்து செல்வதும், மீண்டும் அவன் யாரையோ பார்த்து ஓடுவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து அப்பகுதியில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். நிர்வாண ஆசாமியால் கொடுங்கையூர் பகுதி மக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அது தொடர்பாக சிசிடிவி ஒன்றும் வெளியாகி கத்தியுடன் சுற்றி திரியும் மர்ம நபர் என வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது.
இந்நிலையில் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள தனது கள்ளகாதலி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார். அப்போது, வெளியில் யாரோ வந்ததால், நிர்வாணமான நிலையிலேயே பின்பக்கமாக ஓடிவிட்டதாக கூறியுள்ளார். பின்னர், தனது உடைகளையும், செல்போனையும் எடுக்க மீண்டும் அங்கு சென்றதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதை அடுத்து போலீசார் அந்டா நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.