ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவிகள்! - குளிக்க அனுமதி! மக்கள் மகிழ்ச்சி!
குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதுடன் சீசன் களைகட்டியுள்ளது. தென்றல் காற்றுடன் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து காலையில் ஐந்தருவி மற்றும் பழைய வட்டார அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மெயின் அருவிகள் பாதுகாப்பு வளைவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சாரல் மலையுடன் தென்றல் காற்றும் வீசுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.