Asianet News TamilAsianet News Tamil

Watch Video : நெல்லை மாநகர் பள்ளிகளில் செயல்பாட்டுக்கு வந்த காலை உணவுத் திட்டம்!

நெல்லை மாநகர பகுதியில் உள்ள 22 பள்ளிகளில் முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் மற்றும் ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 

தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று மதுரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் உள்ள 22 பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் 2246 குழந்தைகள் பயன்பெறுவர். இந்த திட்டத்திற்காக நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே பிரத்தியேக ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு அங்கிருந்து 3 வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தினமும் காலை 8 .15 முதல் 8 50 மணி வரை பள்ளிகளில் காலை உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனை கண்காணிக்க மொபைல் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டு புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் காலை உணவு வழங்கும் அலுவலர் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் உணவின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. குரூப் 3 ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. எபப்டி விண்ணப்பிப்பது..?

பள்ளிக்கு காலையில் சரியான நிறத்திற்கு உணவு கொண்டு வரப்படுகிறதா சரியான அளவில் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறதா உணவின் தரம் சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மேலாண்மை குழு மற்றும் மாநகராட்சியின் அதிகாரி ஆகியோர் ஒன்றிணைந்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 4 முதலமைச்சர்கள்..? யார்? யார்? தெரியுமா..? திமுக அரசை இறங்கி அடித்த இபிஎஸ்

மாணவர்களுக்கு காலை உணவு 150 முதல் 200 கிராம் அளவிலும் காய்கறி சாம்பார் 60 மில்லி லிட்டர் அளவிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமையல் கூடத்தில் இருந்து தயார் செய்யப்படும் உணவுகள் மாடர்ன் ஹாட் பாக்ஸில் நிரப்பப்பட்டு தனித்தனியாக பள்ளியின் பெயர் அதில் ஸ்டிக்கர் ஆக ஒட்டப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சராசரியாக ஒரு பள்ளிக்கு 100 மாணவர்கள் வீதம் உணவுகள் தினமும் அளிக்கப்பட உள்ளது

Video Top Stories