Asianet News TamilAsianet News Tamil

போலீஸாருக்கே மரண பயத்தை காட்டிய சாதி வெறியன்.. டிக் டாக் வீடியோ வெளியிட்டு பயங்கர அட்டூழியம்..!

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்த ஜெயகணேஷ். ஜாதி வெறியை தூண்டும் வகையில் இவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

First Published Sep 27, 2019, 6:54 PM IST | Last Updated Sep 27, 2019, 6:54 PM IST

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்த ஜெயகணேஷ். ஜாதி வெறியை தூண்டும் வகையில் இவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அத்தோடு மாற்று ஜாதியினரின் தலையை எடுத்து விடுவதாக இவர் கொலை மிரட்டல் விட்டுள்ளார்.  இதனடிப்படையில் திருப்புவனம் காவல் நிலைய போலீஸார் ஜெயகணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்தனர். 

அவரை கைது செய்யும்போது ஜெயகணேஷ் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் ஜெயகணேஷால் ஸ்டேசனுக்கு வரும் மற்றவர்களுக்கு ஏதாவது சம்பாவிதம் நடந்து விடுமோ என்கிற பயத்தில் காவல் நிலையத்தை பூட்டி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது ஜெயகணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.