நாளுக்கு நாள் வலுவடையும் தமிழக வெற்றிக் கழகம்.. விருதுநகரில் தடபுடலாக நடந்த ஆலோசனை கூட்டம் - வீடியோ!

Thalapathy Vijay TVK  : விரைவில் தனது திரைவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபாவுள்ளதாக அண்மையில் அறிவித்தார் தளபதி விஜய்.

First Published Mar 10, 2024, 4:59 PM IST | Last Updated Mar 10, 2024, 4:59 PM IST

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக நடிகர் விஜய் கடந்த மாதம் அறிவித்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் உறுப்பினர் சேர்க்கையின் செயலியை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அனைத்து கிராமத்திற்கு சென்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விருதுநகர் மற்றும் திருச்சுழி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 600க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Video Top Stories