Land Dispute : தென்காசி.. இட தகராறில் ஏற்பட்ட சண்டை - வயதான பெண்மணியை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர்! Video!

Land Dispute : தென்காசி அருகே இட தகராறு சம்பந்தமாக ஏற்பட்ட சண்டையில், அரசு மருத்துவர் ஒருவர் தாக்கியதில் வயதான பெண்மணி படுகாயம் அடைந்துள்ளார். 

First Published May 19, 2024, 10:06 PM IST | Last Updated May 19, 2024, 10:06 PM IST

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வடநத்தம்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் சமுத்திரவள்ளி. இவர் வீட்டை ஒட்டி ஜான் சிவக்குமார் என்பவர் வீட்டின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 11.5.2024 அன்று சமுத்திரவள்ளியின் வீட்டு சுவர் மீது சேதம் ஏற்படுத்தும் விதமாக ஜான் சிவகுமார் வீடு கட்டுமான பணிகள் நடந்ததாக கூறப்படுகின்றது. 

இதைத் தொடர்ந்து சமுத்திரவள்ளியின் மகன், தங்களது வீட்டு சுவர் பாதிக்கப்படுவதாக ஜான் சிவகுமார் வீட்டில் போய் சொல்லவே, இதில் ஆத்திரமடைந்த அவரது மருமகன், அரசு மருத்துவர் முத்துக்குமார் மற்றும் அவருடைய மாமியார், மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் சேர்ந்து சமுத்திரவள்ளி மற்றும் அவரது மகனையும் தாக்கி சமுத்திரவள்ளியை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. 

இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் குறித்த சேர்ந்தமரம் போலீசார், இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவர் முத்துக்குமார் பக்கத்து வீட்டு சமுத்திரவள்ளியை அடித்து கீழே தள்ளும்  சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Video Top Stories