கோவில் சொத்துகளுக்கும், அன்பர்களுக்கும் திமுக ஆட்சியில் சிறந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது - MLA SS பாலஜி

கோவில்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் பாதுகாப்பு நலன்கள் திமுக ஆட்சியில் வழங்கப்படுவதாக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

First Published Nov 10, 2022, 4:07 PM IST | Last Updated Nov 10, 2022, 4:32 PM IST

வள்ளலாரின் 200ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஆணைப்படி திருப்போரூர் கந்தசாமி தருக்கோவிலில் 'தனிப்பெருங்கருணை நாள்' விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அந்த தொகுதியின் சட்டமன்ற உறுபினர் எஸ்.எஸ்.பாலாஜி, அன்னதான திட்டத்தை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவில் சொத்துகள், மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பு நலன்கள் வழங்கப்பட்டதில்லை என்றும், இந்த திமுக ஆட்சியில் முறையான பாதுகாப்பு நலன்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தா்.