கோவில் அன்னதானத்திற்கு ஏன் அனுமதி ! வெட்கங்கெட்ட செயல்...சேகர் பாபுவை கடுமையாக விமர்சித்த H. ராஜா !
பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அமைச்சர் சேகர் பாபுவை நம்மை பிடித்த ஏழரை சேகர்பாபு என கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காவல்துறையின் ஈரல் பகுதி அழுகிவிட்டது என தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய மகன் ஆட்சியில் முழுவதுமாக அழுகிவிட்டது என குற்றம் சாட்டினார்.