TASMAC Shop: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! இந்த 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!
TASMAC Shop: தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகளையும் இந்த கட்டுரை ஆராய்கிறது. டாஸ்மாக் விற்பனையில் புதிய திட்டங்கள், வீட்டு டெலிவரி சாத்தியக்கூறுகள் மற்றும் விடுமுறை நாட்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
தமிழக அரசு எடுத்து நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கும் அந்த வகையில் இந்த மாதம் ஒரு நாளும் அடுத்த மாதம் ஒரு நாளும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதன் படி மிலாது நபி விழா வருகிற செப்டம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. இதேபோல் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.