ஜனவரி 17-ம் தேதியும் அரசு விடுமுறை! பொங்கலுக்கு மொத்தம் எத்தனை நாள் லீவு?
2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் 16 வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் 16 வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக் குதிக்கின்றனர்.