
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு....வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை !
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு இயல்பான வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.