
வக்பு சட்டத்திருத்த வழக்கில் தமிழக அரசு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் ! ஆதவ் அர்ஜுனா பேட்டி !
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். திமுக சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், கேரளா அரசு இந்த வழக்கில் தன்னை இணைத்து கொண்டுள்ளது போல் தமிழக அரசும் இந்த வழக்கில் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பு ரீதியாக வாதங்களை வைக்க வேண்டும். இதற்கு திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்த வேண்டும். என்று தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார் .