பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி! விவசாயிக்கு பயிர் கடன்! தமிழக அரசு சொன்ன சூப்பர் திட்டம் !
தமிழ்நாடு முதலமைச்சர் சீர்மிகு திராவிடமாடல் ஆட்சியின் கீழ் அனைத்து துறைகளிலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுகின்ற வகையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி விகிதத்தைவிட 2024-2025ஆம் ஆண்டில் 9.69% வளர்ச்சி விகிதத்துடன் எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி அதிகபட்ச வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதத்தில் கூட்டுறவுத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நல்ல வாய்ப்பினை எனக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு 9.69% வளர்ச்சி அடைந்துள்ளது. கூட்டுறவுத்துறையின் பங்களிப்புடன் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.