Electricity Bill Hike : உயர்கிறது மின் கட்டணம்.. பயங்கர ஷாக் கொடுத்த தமிழக அரசு - மக்கள் கருத்து என்ன? Video!

Electricity Bill Hike : தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

First Published Jul 16, 2024, 9:21 PM IST | Last Updated Jul 16, 2024, 9:21 PM IST

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல், புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. யூனிட் ஒன்றுக்கு 20 முதல் 55 பைசா வரை இப்போது மின் கட்டணம் அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 0 முதல் 400 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கான கட்டணம், ஒரு யூனிட்டுக்கு 4.60 காசுகளிலிருந்து 20 காசுகள் அதிகரித்து, 4.80 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் 41 முதல் 500 யூனிட்டுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 6.15 பைசா என்ற அளவில் இருந்து, 6.45 பைசாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 501 முதல் 600 யூனிட் மின் பயன்பாட்டுக்கான கட்டணமானது 8.15 பைசாவிலிருந்து 8.55 பைசாவாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசின் இந்த மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக் குரல் தெரிவித்து வரும் நிலையில், நமது ஏசியாநெட் தமிழ் செய்தி நிறுவனம், மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடையே கருத்துகணிப்பு நடத்தியுள்ளது.