
புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் - செந்தில் பாலாஜி
கரூரில் கட்டப்பட்ட வரும் புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி கூறினார். கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது இந்த கட்டுமான பணிகளை இன்று செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் திருமானூர் பகுதியில் 40 ரூபாய் மதிப்பீட்டில் 68 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது இதன் 80 சத பணிகள் நிறைவுற்றள்ளன. மீதி உள்ள 20 சத ஒரு மாத காலத்திற்கு நிறைவு பெற உள்ளது.