கோவையில் திடீர் மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி !

Share this Video

தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் கோவையில் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று காலை திடீரென நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. குறிப்பாக கோவை காந்திபுரம்,100 அடி சாலை,சிங்காநல்லூர்,பீளமேடு,கணபதி,ரேஸ்கோர்ஸ்,ரயில் நிலையம்,உக்கடம் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால்பொதுமக்களும்,விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.திடீர் மழை காரணமாக கோவை மாநகர முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை வருகிறது.

Related Video