சென்னிமலையில் உள்ள 1320 படிக்கட்டுகளை கட்டை காலில் ஏறி மாணவர்கள் சாதனை ...!

Share this Video

பண்டைய கால தமிழர்களின் வாழ்க்கை முறையில் நாட்டியம், கரகம்,கட்டைக்கால், மரக்கால், பொய்க்கால் குதிரை, எருது ஆட்டம்,கொக்கிலி ஆட்டம் போன்றவைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது அது காலப்போக்கில் ஒரு சில ஆட்டங்கள் மறைந்து போனது. இதை மீட்டெடுக்கும் வகையில் காலில் கட்டையை கட்டிக் கொண்டு மலை மேல் ஏறும் பயிற்சி முதல்முறையாக இக்குழுவினர் திருச்செங்கோட்டில் ஈடுபட்டனர். அங்கு குறைந்த அளவே மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மீண்டும் பயிற்சியை கடினமாக்கி கொண்டு தற்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள்மிகு சிரகிரி வேலவன் கோவில் 1320 படிக்கட்டுகளை கட்டைக்கால் கொண்டு ஏறி சாதனை படைத்தனர்.

Related Video