
அரசுப் பள்ளி மாணவனுக்கு ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டல் ! மாணவன் கொடுத்த பரபரப்பு புகார் !
கரூர் மாவட்டம் மணவாசியை அடுத்த வளையக்காரன் புதூரை சார்ந்த மாணவன் நாகராஜன். இவர் கருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது குரல் பெண் போன்று இருப்பதால், ஆங்கில ஆசிரியர் செந்தில் குமார் என்பவர் தன்னிடம் ஆபாசமாக பேசுவதும், தொடக் கூடாத இடங்களில் தொடுவது போன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், ஒரு வார காலம் பள்ளிக்கு செல்லவில்லை என்றும், இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தால், வீண் பழி சுமத்தி பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவேன் என மிரட்டுவதாகவுன், நான் பள்ளிக்கே அவமானம் எனக் கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.