
தெரு நாய்யை ஒழிப்பதால், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது - சீமான் பேட்டி
கழுதை, சிட்டுக் குருவி, வண்ணத்துப் பூச்சிகள் போன்றவை அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. நான் எந்த அழிவிற்கும் கவலைப்படவில்லை. நாம் சக மனிதன் சாவையே சகித்துக் கொண்டு தான் செல்கிறோம். நாயை முற்றிலுமாக ஒழிப்பதால், எலிகள் பெருகும், பிளேக் நோய்கள் பெருகக் கூடிய ஆபத்து இருக்கிறது. எதையும் ஒரு சம நிலையில் வைக்க வேண்டும். இதற்காக மாநகராட்சி முறையாக நாய்களை பராமரித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். நீங்கள் அதைத் தெரு நாய் எனக் கூறுகிறீர்கள், ஆனால் அது தான் நம்முடைய வீட்டு நாய்.. நாம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உயர் தர நாய்களை வீட்டிற்குள் கொண்டு வந்ததால் இவைகள் தெரு நாய்கள் ஆகிவிட்டது.