Pongal Special

தைப்பொங்கல் தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதுபோல், ஆடியில் விதைத்ததை தையில் அறுவடை செய்து அந்த அரிசியுடன், சர்க்கரை கலந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்குப் படைப்பார்கள். இதைதான் அறுவடைத் திருநாள் என்பர். இந்நாளில் வீடுகள் எல்லாம் களைகட்டும்.
 

Share this Video

தைப்பொங்கல் என்பது விவசாயத்தை கொண்டாடும் விழாவாகும். இந்நாளில், விவசாயத்திற்கு உதவியாக உள்ள இந்திர பகவான், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபடுவதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உதவும் கருவிகளையும் வைத்து வணங்குவார்கள். அன்றைய தினத்தில், கிராமங்களில் இருக்கும் மக்கள் அதிகாலமே எழுந்து சூரியபகவானை வணங்கி, குடும்பமாக இணைந்து பொங்கலிட்டு மகிழ்வார்கள். எனவே, இந்த தைப் பொங்கல் உங்கள் வாழ்வில் செழுமை மற்றும் இனிமையைக் கொண்டு வரட்டும்.

Related Video