காட்டி கொடுத்த ஷூ! குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்!
Chennai Police Encounter : சென்னையில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது ஒரு மணிநேரத்திற்குள் 6 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பல் விமானத்தில் தப்பிக்க முயன்ற போது சினிமா பாணியில் கைது செய்யப்பட்டனர். இதில், ஜாபர் என்ற நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கமளித்துள்ளார்.