
இந்த ஆண்டு 64 அரசு கலை கல்லூரிகளில் ஷிப்ட் 2 முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது ! கோவி செழியன் பேட்டி !
திருவிடைமருதூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி. இந்த ஆண்டு 64 அரசு கலை கல்லூரிகளில் ஷிப்ட் 2 முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக கல்வி கற்பார்கள் என்றும் , இந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரிகளில் 7 புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கோவி. செழியன் தெரிவித்தார். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட 25 சதவீதமானவர்கள் கூடுதலாக இந்த ஆண்டு கல்வி கற்பார்கள் என்றும் கோவி .செழியன் தெரிவித்தார். திருவிடைமருதூரில் புதிதாக அமையப்பெற்ற அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல் ஆண்டு வகுப்பினை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று துவக்கி வைத்தார்.