செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கோர்ட்டில் ஆஜர்.. 2 ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு சரண்!
சென்னை: கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை 2 வருடங்களாக அமலாக்கத்துறையினர் வலைவீசித் தேடி வந்த நிலையில் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி உள்ளார் அசோக் குமார்.