
கட்சி தலைமை எப்படியோ அதே போல் தொண்டர்களும் பொய் சொல்வதே வாடிக்கை -அதிமுக குறித்து செந்தில் பாலாஜி
கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏழு இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மத்திய கிழக்கு பகுதி கழகம் சார்பில் பசுபதிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர்உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிபோக்குவரத்து துறையில் கடந்த ஐந்தாண்டில் ஒரு திட்டத்தையாவது கரூருக்கு கொண்டு வந்தார்களா? தகுதி இல்லாதவர்கள், அருகதை இல்லாதவர்கள் மேடை போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி தலைமை எப்படியோ அதே போன்று தான் அவர்களும், பொய் சொல்வதே வாடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சியில் நான்காண்டு சாதனை திட்டங்களை பொறுத்துகொள்ள முடியாமல் அவதூறுகளை பரப்ப முயற்சி செய்கின்றனர் என்றார்.