
வளரும் போதே பாலூட்ட வேண்டும்..! - தமிழக அரசு லேப்டாப் திட்டம் குறித்து செங்கோட்டையன் விமர்சனம் !
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு லேப்டாப் வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வழங்க வேண்டியதை இப்போது வழங்குவது பொருத்தமல்ல.அப்போது இருந்த மாணவர்களின் நிலை குறித்து கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும்.எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது கிடைத்திருக்க வேண்டும்” . தமிழக அரசு லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்து, “வளரும் போதே பாலூட்ட வேண்டும்; வளர்ந்த பிறகு பாலூட்ட தேவையில்லை” என த.வெ.க. தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.