
யாரையும் சந்திக்கவில்லை.. இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் - செங்கோட்டையன் பேட்டி
என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது. எம்ஜிஆரின் கனவு, ஜெயலலிதா சட்டமன்றத்தில் உரையாற்றும் பொழுது 100 ஆண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்று கூறினார். அந்த கனவை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்து தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை உயிர்மூச்சாக, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் இந்த இயக்கம் வலிமை இரண்டு நோக்கத்தோடு தான் அன்று எனது கருத்தை தெரிவித்து இருந்தேன்.