SIR என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ...இதை ஒத்திவைக்க வேண்டும் ! செல்வப்பெருந்தகை பேட்டி

Share this Video

2026 தேர்தலுக்கு பிறகு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்காளரையும் மூன்று முறை சரிபார்த்து, அவர்களிடமிருந்து படிவங்களை நிரப்பி பெறுவது மனிதவள ரீதியாக 30 நாட்களில் இயலாதது. இதில் ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளிட்ட நான்கு விடுமுறை நாட்களும் உள்ளன. எனவே, அந்த நாட்களிலும் வாக்காளர் அலுவலர்கள் (BLOs) பணிபுரிவார்களா என்ற விளக்கம் வேண்டுகிறோம் என தேர்தல் அதிகாரிக்கு கடிதம் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் SIR என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது . இதை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .

Related Video