விஜய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - செல்வப்பெருந்தகை சரவெடி பேச்சு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற்றது. அதில் அனல்பறக்க பேசிய விஜய், அரசியல் கட்சிகளையும் சரமாரியாக சாடினார். குறிப்பாக ஆளும் திமுக அரசையும், நாட்டை ஆளும் பாஜக அரசையும் லெப்ட் ரைட் வாங்கினார்.
இந்த நிலையில், விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் விஜய் சொன்னதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா என்று பேசி இருக்கிறார். அவரின் அந்த முழு பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.